இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக திருச்சி காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டங்கள்
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மேலசிந்தாமணி பன்ஜோன் பிரீ பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை மாநகர் மாவட்ட காங்கிரஸ் &தலைவர் எல்.ரெக்ஸ் வழங்கினார்.
இந்த நிகழ்வில். சிறுபான்மை பிரிவு திருச்சி மாவட்ட தலைவர் பஜார் மைதீன், பாலக்கரை இம்தியாஸ், தர்கா சுக்குர், கிருபா , முபாரக் அலி, பீம நகர் அப்பு, உறையூர் விஜய்,சசிகுமார் , பள்ளி தாளாளர் யாஸ்மின் பேகம்,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என திரளானோர் பங்கேற்றனர் .