மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் மட்டும் இயங்கும் . திருச்சி கலெக்டர் அறிவிப்பு முழு விவரம் .
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் இயங்காது.நகர பேருந்துகள் மட்டும் இயங்கும்:.
வருகிற 16-ந் தேதி முதல்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயங்கும்
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பேட்டி..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு கலெக்டர் சரவணன் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வருகிற 16-ந் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்து இயங்கும்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் இயங்காது.நகர பேருந்துகள் மட்டும் இயங்கும். அதிகாலை 3 மணி முதல் நகர பேருந்துகள் பஞ்சப்பூரிலிருந்து இயங்கும்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் கடலூர்,பெரம்பலூர்,அரியலூர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.
ஆமினி பேருந்துகள் பஞ்சப்பூர் பகுதியில் தற்போதைக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்லலாம் மத்திய பேருந்து நிலைய வெளிப்புறம் அவர்கள் வந்து செல்ல அனுமதி உண்டு.
20 தேநீர் கடை,12 உணவகம்,10 ஸ்நாக்ஸ் ஷாப், பஞ்சப்பூர். பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நிரந்தர காவல் நிலையம் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அமைக்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு நகர பேருந்துகள் இயக்கப்படும். வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகளும் இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.