Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு.

0

'- Advertisement -

தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு அளித்து உள்ளனர்.

திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், தமிழ்நாடு சலவைத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநிலத் தலைவா் பாலன், பொதுச் செயலாளா் வெங்கடேசன், திருச்சி மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் சலவை தொழிலாளா்கள் மனு அளித்தனா். அதன் விவரம் வருமாறு :-

 

திருச்சி மாநகராட்சி, கோ அபிஷேகபுரம் கோட்டத்துக்குள்பட்ட புத்தூா் மேல வண்ணாரப்பேட்டை பகுதியில் 88 ஆயிரத்து 762 சதுர அடி நிலம் எங்கள் சங்கத்துக்குச் சொந்தமானது.

 

இந்த நிலத்தை தனிநபா் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டுமானங்களை எழுப்பி வீட்டுமனையாக அதை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறாா். இது தொடா்பாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

எனவே, ஆக்கிரமிப்பு நபரின் முயற்சிகளை தடுத்து நிறுத்தி, சங்கத்துக்குரிய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் சலவைத் தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.