Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுகாதாரத்துறை அமைச்சர் நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்ட தலைவி காயத்ரி தேவி

0

'- Advertisement -

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது .

 

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி, சமுதாய,சுகாதார, செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வரின் கவனத்தை இருக்கும் விதமாக பெருந்திரள் முறையீடு காத்திருப்பு போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 3800 துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் கிராம சுகாதார செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்,

துணை சுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளரை கொண்டு தடுப்பூசி போடும் ஆணையை ரத்து செய்ய வேண்டும், கருவுற்ற தாய்மார்கள் சுய பதிவு செய்ய வேண்டியதை கிராம சுகாதார அலுவலர்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

திருச்சி மாவட்ட தலைவர் காயத்ரி தேவி தலைமையில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருச்சி மாவட்ட தலைவர் காயத்ரி தேவி

செவிலியர்கள் தங்களது இன்னுயிரை பொருட்படுத்தாமல் கொரோனா காலகட்டத்தில் மக்களை சந்தித்து தடுப்பூசி போடும் பணி உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளையும் மேற்கொண்டோம். ஆனால் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

 

ஆகையால் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் ஒன்றிணைந்து முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் விதமாக சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.