இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாப பலி .
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணி அளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள மூடி இருந்த ரயில்வே கேட்டை திறந்து கடக்க முயற்சி செய்துள்ளது.
இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி வேன் மீது ரயில் போது பயங்கர விபத்தானது. இது பேருந்து முழுவதும் நொறுங்கி சேதமானது.
இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 6ம் வகுப்பு படிக்கும் நிமலஷ் (வயது 10) என்ற மாணவனும் 11ம் வகுப்பு மாணவி சாருமதி (வயது 15) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து படுகாயம் அடைந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.