Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

0

'- Advertisement -

திருச்சி ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை .

 

நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆசிரியரான அவரது மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.

 

திருச்சியில் ஆர்.டி.ஓ. ஆக பணியாற்றி வரும் சுப்பிரமணி (வயது 54) மற்றும் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வரும் பிரமிளா இருவரும் இன்று அதிகாலை வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இவர்கள் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

உயிரிழந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

 

உடல்களைக் கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.