Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீ சாதாரண அதிமுக கவுன்சிலர், உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. இபி பொறியாளர் தெனாவட்டு பேச்சு .

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வருகிறார் . அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு முறைப்படி பணமும் கட்டி விட்டார் .

 

இதனைத் தொடர்ந்து அவரின் வீட்டு அருகே இரண்டு போஸ்ட் கம்பங்கள் நடுவே இவர் கட்டி வரும் புதிய வீட்டினின் அருகே புதிய மின் கம்பம் மூன்று மாதங்கள் முன்பு யாரும் இல்லாத நேரத்தில் நடப்பட்டது . அந்த இரண்டு கம்பங்களில் ஒன்று சரிந்து இருந்தது அதனை சரி செய்யாமல் புதிதாக கட்டி வரும் வீட்டின் மேலே மின் ஒயர்கள் சென்று நேராக உள்ள போஸ்ட் கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் மேலே ஒட்டும் பணி கூட செய்ய முடியாத அளவில் மின் வயர்கள் செல்கிறது .

 

சில அடிகள் மின்கம்பங்களை மாற்றி தாருங்கள் என இடத்தின் உரிமையாளர் பலமுறை மின்வாரியம் சென்று முறையிட்டும் எந்த பயனும் இல்லை . முன்னதாகவே மின் இணைப்பு கேட்டபோது ரூ.5000 கையூட்டு பெற்றுக் கொண்டுதான் இந்த மின் கம்பம் நடப்பட்டது . தற்போது இந்த மின்கம்பம் சற்று நகற்றி வைக்க ரூ.15,000 தர வேண்டும் என்று வாரியா அலுவலகத்தில் கூறியுள்ளனர்.

 

இதனை அறிந்த புங்கனூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக முன்னாள் கவுன்சிலரான கார்த்தி மின்வாரிய அலுவலகம் சென்று கேட்டுள்ளார் . அவர்கள் ஏஇ அசோக் குமாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர் . அவரை தொடர்பு கொண்டு பேசியபோது எதற்காக மீண்டும் பணம் தர வேண்டும் இது உங்கள் தவறு தானே சரி செய்து தாருங்கள் எனக் கூறிய போது யாராயிருந்தாலும் தர வேண்டியதை தந்தால் தான் வேலை நடக்கும் நீ சாதாரண அதிமுக கவுன்சிலர் அதுவும் முன்னாள் கவுன்சிலர் உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள் என தெனாவட்டாக பேசி உள்ளார் உதவி பொறியாளர் அசோக் குமார் .

மின் வாரியம் செய்த தவறை திருத்திக் கொள்ள ரூ. 15000 லஞ்சம் கேட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? என புங்கனூர் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி கேள்வி.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.