திருச்சியில் பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திருச்சி மாநகரம் மலைக்கோட்டை, பாலக்கரை, மார்க்கெட், அரியமங்கலம், கலைஞர் நகர்
ஆகிய பகுதிகளில்
உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் .
கிழக்குத் தொகுதி மாநகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும், திராவிட மாடல் அரசின் திட்டங்களையும் எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில் மாநகர செயலாளர்
மு. மதிவாணன்,
தொகுதி பொறுப்பாளர் கதிரவன்,
மாவட்ட நிர்வாகிகள் மணிமேகலை,
ராஜேஸ்வரன்,
பகுதி செயலாளர்கள்
மோகன், பாபு,
ராஜ்முஹம்மது, விஜயகுமார், மணிவேல் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.