திருச்சி பொன்னகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார் .
ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை திமுக முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி பொன்நகரில் இன்று வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும் மேயருமான அன்பழகன், ஜங்ஷன் பகுதி செயலாளர் மோகன் தாஸ், வட்டச் செயலாளர் ராமதாஸ் , தகவல் தொழில் நுட்ப அணியினர் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.