திருச்சியில் என்னைய கீழ இறக்கி விடுற எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது .
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கீழ கல்கண்டார் கோட்டைக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குமார் என்ற டிரைவர் ஒட்டி சென்று கொண்டு இருந்தார் .இந்த நிலையில் நேற்று காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்த பொழுது பஸ்சில் இருந்த சங்கரன் (வயது 32) என்ற வாலிபர் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டார்..இந்நிலையில்
டிரைவர் மற்றும் கண்டக்டர் சேர்ந்து வாலிபர் சங்கரனை பஸ்சிலிருந்து கீழே இறக்கி விட்டனர்.இந்த நிலையில் கீழே இறங்கிய வாலிபர் சங்கரன் திடீரென்று பஸ்சின் பின்பக்கம் சென்று கல்லை எடுத்து பஸ்ஸில் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டார். இது குறித்து பஸ் டிரைவர் குமார் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரன் (வயது 32) என்ற வாலிபரை கைது செய்து உள்ளனர் .