Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் இனி திருச்சி கலெக்டர்.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் பணி மாறுதல் ஆகி கடந்த 15.02.2024 முதல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் .

 

இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தற்போது 9 மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது . அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வந்த பிரதீப் குமார் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்ற உள்ளார் .

 

கடந்த ஓராண்டு மேலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சரவணன் தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார் .

 

புதியதாக பொறுப்பேற்க உள்ள வே.சரவணன் கூறுகையில் திருச்சி மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.