திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 20.06.2025 (வெள்ளிக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
மின்சாரம் திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட 11 கி.வோ. கான்வென்ட் ரோடு உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .
திருச்சி நகரியம் கோட்டம், 110 கி.வோ. திருச்சி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.வோ. கான்வென்ட் ரோடு உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை இரயில்வே ஜங்ஷன், எல் ஐ சி , பாரதியார் சாலை, பறவைகள் சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம், ஒத்தக்கடை, கான்வென்ட் ரோடு, மார்சிங் பேட்டை, கூனி பஜார், மேலபுதூர், அரசமரத் தெரு, மேல தெரு, கொட்ட கொல்ல தெரு, பீமநகர், கண்டி தெரு, அந்தோணியார் கோவில் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று
திருச்சி தென்னூர் இயக்கலும் மற்றும் காத்தலும் செயற்பொறியாளர் கே.ஏ. முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.