Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலஹாசனை நேரில் சென்று வாழ்த்திய திருச்சி மநீம மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.எஸ் ஜி. சதீஷ்குமார்.

0

'- Advertisement -

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கமல்ஹாசன் வருகை தந்த அன்று அவருக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்தார். நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவுறுத்தியிருந்தபடி, பெரும்பாலான நிர்வாகிகள் பூங்கொத்து, பொன்னாடைக்குப் பதில் புத்தகங்களைப் பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம் பி யாக தேர்ந்தெடுத்ததை முன்னிட்டு அவர்களை திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் சேர்ந்து நேரில் சென்று திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் sps.G.சதீஸ்குமார் மனமகிழ்ச்சியுடன் வாழ்த்த தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.