திருச்சி ஸ்ரீரங்கத்தில்
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் பிணம்.
உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை .
திருச்சி ஸ்ரீரங்கம் புலிமண்டபம் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது 59). சமையல் மாஸ்டர்.இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது நாகராஜன் வசித்த வீடு பூட்டி கிடந்தது . இந் நிலையில் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர மூர்த்தி தலைமையிலான போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று நாகராஜனின் வீட்டை பார்த்தனர். அங்கு நாகராஜன் அழகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன நாகராஜனின் நண்பர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகராஜன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.