கன்னடம் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், எல்லாம் தமிழில் இருந்து வந்தது தான்.கமல் சொன்னதில் தவறில்லை திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு
கமல் சொன்னதில் என்ன தவறு இல்லை.
யாரும் கமல் மன்னிப்பு கேட்டதை விரும்பவில்லை.திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் ரூ. 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொரோனா பரவி வருகின்ற காரணத்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அனைத்து துறை செயலாளர்களையும் அழைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அறிவுரை கூறியுள்ளோம். திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
ஜூன் 12 ந்தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்து இடங்களும் தூர்வாரப்பட்டுள்ளதா என
கேட்டதற்கு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தூர்வாரச் சொல்லி அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவலை தடுப்பதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து முதலமைச்சர் கூட்டம் கூட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளாரே எனக் கேட்டபோது அவங்க சொல்லுவாங்க. யாரும் கமல் மன்னிப்பு கேட்டதை விரும்பவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. தமிழ் மொழியில் இருந்து தான் அனைத்தும் வந்தது தெலுங்கு, மலையாளம், எல்லாம் தமிழில் இருந்து வந்தது அவர் சொன்னதில் எதுவும் தப்பில்லை.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை கூறிஇருக்கிறாரே என்று கேட்டதற்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், சேகர் பாபு அமர்ந்து இது குறித்து கூறிவிட்டனர். அதற்குரிய பதிலை அளித்துள்ளனர் .
தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை கூறுகின்றனர்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை வருகின்ற 17ந் தேதி பராமரிப்பு டெண்டர் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் அதற்குண்டான வேலைகள் தொடங்கப்படும்
மழைக்காலங்களில் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்குகிறதே எனக் கேட்டபோது அது எந்தெந்த இடம் என கண்டறியப்பட்டு அதனை சரி செய்வோம் எங்களுடைய வேலையை அதுதானே.
இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார்.
பின்னர் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தற்பொழுது பரவியுள்ள கொரோனா வீரியம் இல்லாத கொரோனா என சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனை கண்டு பயப்பட தேவையில்லை, தீவிரமடைந்தால் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் தான் உள்ளது. கொரோனா பயமுறுத்தும் வகையில் இல்லாததால் இது குறித்து எந்த அச்சமும் படத் தேவையில்லை. பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்துவீர்களா என கேட்ட பொழுது தேவைப்பட்டால் செய்வோம் .
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கூறினார்.