Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் ‘இந்தியாஎட். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக் நிறுவனங்களுக்கு ஆற்றலை வழங்க ‘இந்தியாஎட்’ வட்டியில்லா கல்வி கட்டண நிதியுதவி.

0

'- Advertisement -

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் ‘இந்தியாஎட்

 

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக் நிறுவனங்களுக்கு ஆற்றலை வழங்க ‘இந்தியாஎட்’ வட்டியில்லா கல்வி கட்டண நிதியுதவி வழங்குகிறது

 

இந்தியாவின் கல்வியை நோக்கமாகக் கொண்ட வங்கி சாரா நிதி

 

நிறுவனமாகிய ஆக்சிலோ ஃபின்சர்வ், ‘இந்தியாஎட்’ எனும் வட்டியில்லா பள்ளி மற்றும் தனிப்பயிற்சிக் கட்டண நிதி உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விக்கான நிதி உதவியின் முறையை மறுவடிவமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தியாஎட் திட்டம், மாணவர்களும் கல்வி நிறுவனங்களும் எதிர்கொள்ளும் நிதிசார்ந்த சவால்களைத் தீர்க்கும்.

 

‘நாங்கள் கல்வி நிறுவனங்களுடன் நேரடி ஒத்துழைப்பில் உள்ளோம். கற்போர் மற்றும் நிர்வாகிகள் ஆகியயோர் பயன் பெறும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், கல்விப் பயிற்சி மையங்கள் மற்றும் எட்டெக் வழங்கு நிறுவனங்களுக்கு உகந்த நிதியுதவித் தீர்வுகளை வழங்குகிறோம்’ என்கிறார் ஆக்சிலோ ஃபின்சர்வின் உள்ளூர் கடன்கள் துறையின் முதன்மை வணிக அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம்.

 

இந்தியாவின் தனியார் கல்விச் சந்தை தற்போது $52 பில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, டிஜிட்டல் மற்றும் தனிப்பயன் கற்றல் முறைகளின் விரைவான பரவலுடன் இதன் ஆண்டு வளர்ச்சி 12% சிஏஜிஆர் ஆகும். ஆக்சிலோவின் இந்தியாஎட், வளரும் தேவையை நெகிழ்வு மற்றும் வேகத்துடன் சேவையை வழங்கத் தயாராக உள்ளது. நிறுவனத்தின் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பும் அண்மை முதலீடும் உதவியாக உள்ளன.

 

இந்தியாஎட்- நிறுவன கூட்டாண்மை மாதிரியின் முக்கிய அம்சங்கள்

 

கல்விக்கான முழுமையான செலவுகளையும் உள்ளடக்கும்: பள்ளிக் கட்டணம், இளநிலை/முதுநிலை கல்விக் கட்டணங்கள், போட்டித் தேர்வுக்கான பயிற்சி, திறன்

 

நெகிழ்வான கடன் தொகைகள்: ரூ 20,000 முதல் ரூ 10,00,000 வரை கட்டணங்கள்

 

பணம் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுகள்: 3 மாதங்கள் முதல் 72 மாதங்கள் (6 ஆண்டுகள்) வரை

 

ஆன்லைன் செயல்முறை: முழுமையான டிஜிட்டல் மற்றும் காகிதமில்லாச் செய்முறை

 

காத்திருக்க வேண்டிய அவசியமில்லா பூஜ்ய காலம் கூட்டாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு உடனடி நிதி வழங்கல்; நிகழ் நேர நிதி ஆதரவிற்கான உறுதிப்பாடு

 

செயலாக்கம் முடிந்த ஒப்புதலுக்குப்பின் 24 மணி நேரத்துக்குள் ஆக்சிலோ நிறுவனம் அந்த நிதியை நேரடியாகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு அனுப்பும்.

 

‘இந்தியாவின் கல்வி சூழல் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. உயரும் கல்விக் கட்டணங்கள் மற்றும் ஆன்லைன் கற்றல், தனிப்பயிற்சி மற்றும் பாடத் திட்டம் சாரா கூடுதல் பாடங்கள் போன்ற விரிவாகும் தேவைகளைப் பொருத்து, குடும்பங்கள் புத்திசாலித்தனமான நிதி விருப்பங்களை நாடுகின்றன. “இந்தியஎட்” தேவையுள்ள நேரத்தில், தடையில்லா, வட்டியில்லா நிதி உதவியினை வழங்குவதன் மூலம், மாணவர்களும் கல்வி வழங்குநர்களும் பயன்பெறுவார்கள்’ என மேலும் தொடர்ந்தார் ஆனந்த் சுப்பிரமணியம்,

 

அடுத்து, இந்த சேவையின் இரண்டாம் கட்டத்தில், மாணவர்கள் அல்லது தனிப்பட்ட கடனாளிகள், பள்ளிக் கல்வி, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்துறை பயிற்சிக்கான கடன்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என ஆக்சிலோ விரைவில் அறிவிக்க உள்ளது.

 

2024 மார்சில், ஆக்சிலோ $33.4 மில்லியன் முதலீட்டை லீப் ஃப்ராக் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றது. ட்ரைஃபெக்டா லீடர்ஸ் ஃபண்ட் 1 மற்றும் எக்ஸ்பொனன்ஷியா ஆபர்சூனிடீஸ் ஃபண்ட் || போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இதில் பங்களிக்கின்றனர். இந்த முதலீடுகள், இந்தியாவின் அடுத்த தலைமுறை கற்றலாளர்களுக்காகச் சேவை வழங்கும் இந்தியாஎட் போன்ற நிறுவனங்களின் புதிய முயற்சிகளை ஆதரிக்கின்றன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.