Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

0

'- Advertisement -

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல சிந்தாமணி பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குறை பிரசவ சிசுவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கிடந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பாலாம்பிகா கொடுத்த புகாரின் பேரில், கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றினா்.

 

இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மேலச் சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டாவதாக இந்தக் குழந்தை, குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளது. பிறக்கும்போதே இறந்து பிறந்ததால் பெற்றோா் செய்வதறியாது தவித்துள்ளனா்.

 

பின்னா் யாரும் அறியாதவாறு குழந்தையின் சடலத்தை ஒரு பையில் வைத்துசுற்றி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்தது. குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.