திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 45). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் உறையூர் பகுதியில் மேன்சனில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். புத்தூர் நான்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன கிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.