திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்
மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு.
முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்4, வார்டு எண் 57,எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிதாக கட்டப்பட்ட வரும் மாதிரி மாநகராட்சி பள்ளி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறக்கப்பட உள்ளதை மேயர் மு. அன்பழகன் முன்னேற்பணிகளை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் பி. சிவப்பாதம், செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் துர்கா தேவி , மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.