திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியில்
முட்புதரில் பிணமாக
கிடந்த பிரபல ரவுடி.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி ஆர் எம் எஸ் காலனி ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் சூர்யா (வயது 25) பி.ஏ பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது மேலும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் ஆர்.எம்.எஸ் காலனி ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் முட்புதருக்குள் பிணமாக கிடந்து உள்ளார்.
இதுகுறித்து அவரது தாயார் வைரமணி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சூர்யா ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.