திருச்சி காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அமமுகவினர் மேயரிடம் மனு .
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைப்படி,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின் கீழ்,
உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் மற்றும் வர்த்தக அணி செயலாளர் கல்லணை குணா ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
மேயர் அவர்களுக்கு.
மேஜர் சரவணன் சந்திப்பு- காவேரி மருத்துவமனை -மத்திய பேருந்து நிலையம் – போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகள் சம்பந்தமாக.
திருச்சி மேஜர் சரவணன் சந்திப்பிலிருந்து மத்திய பேருந்துக்கு செல்லும் வழியில், பழம்பெருமை வாய்ந்த செயிண்ட் ஜான் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி அமைந்துள்ளது.
அதேபோல பல மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து போகும் காவேரி மருத்துவமனை உள்ளது.
இத்தகைய போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், பள்ளி காம்பவுண்ட் சுவரை ஒட்டியே, சாலையை ஆக்கிரமித்து ஏகப்பட்ட கடைகள் உள்ளன.
ஒட்டுமொத்த திருச்சி மாநகர மக்களும், மத்திய பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய பகுதி என்பதால் இப்பகுதியில் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.
அதேபோல் இரவு நேரங்களில் சமூக விரோத நடவடிக்கைகளும் இருப்பதாக மக்களிடையே அச்சம் உள்ளது.
எனவே உடனடியாக மாநகராட்சி தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, உயிர் பலிகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல், நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. .