திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் ‘ லாட்டரி விற்ற 2 பேர் கைது
திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமிலாபானு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரெயில்வே காலனியை சேர்ந்த முருகானந்தம் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதே போன்று திருச்சி சங்கிலியாண்டபுரம் டீக்கடை அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டு, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.