திருச்சி பாலக்கரையில்
போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது.
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாலக்கரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து சிவா சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அங்கு சென்ற போது அங்கு முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 31 )திலீப் (வயது 22) கோபிநாத் (வயது 20)ஆகிய மூன்று வாலிபர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.