திருச்சியில் சர்க்கரை நோயால் பாதித்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் ஸ்டீபன் (வயது 33)இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது.
இதனால் இத்தனை நாள் இனிப்புகள் சாப்பிட முடியவில்லை , சிறு காயம் ஏற்பட்டால் வரும் புண்கள் கூட குணம் ஆக மாட்டேங்குகிறதே என்ற மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் .
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த ஸ்டீபன் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரர் பாக்யராஜ் ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தியின் நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.