Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர்:பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது .

0

'- Advertisement -

திருவெறும்பூர் அருகே பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது .

 

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் 11வதுகுறுக்கு தெருவை சேர்ந்தவர் எட்வின்ராஜ் இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 

இவரது மனைவி வித்தியா லால்குடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் வேலைப் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு வித்யா அம்மன்நகர் 10-வது குறுக்குசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவன் வித்யா அணிந்திருந்த 6 பவுன் தாலி செயின் மற்றும் 3 பவுன் செயின் என இரண்டு தங்க செயின்களை அறுத்துக் கொண்டு ஓடி உள்ளான்.

 

வித்யா கத்தி கூச்சலிட்டு பொதுமக்கள் வருவதற்குள் பைக்கில் ரெடியாக இருந்த மற்றொருவன் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளான். இச்சம்பவம் குறித்து வித்யா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

அதனடிப்படையில் திருவெறும்பூர் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க திருச்சி எஸ் பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி அரவிந்த் பனாவத் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், தலைமை காவலர்கள் ஹரிஹரன், அருண் மொழி வர்மன், நல்லேந்திரன், ராஜேஷ். சதீஷ்குமார், கணேசமூர்த்தி, நிர்மல் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைத்து தப்பி ஓடிவர்களை தேடிவந்தனர்.

 

திருவெறும்பூர் காவல் நிலைய தனிப்படையினருக்கு கிடைத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டபோது வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அருள்மொழி மகன் மணிகண்டகுமார் மற்றும் கடலூர் குறிஞ்சிப்பாடி கார்த்திகேயனின் 17 வயது மகன் என்பது தெரிய வந்தது.

 

அதன் அடிப்படையில் அவர்களை பிடித்து விசாரித்தபோது திருவெறும்பூர் கோகுல் நகர் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

மேலும், கடலூர் மாவட்டம் புவனகிரி செயின் பறிப்பில் வண்டி ஓட்டியது மயிலாடுதுறையை சேர்ந்த டைட் என்பது தெரியவந்தது.

 

அவனை பற்றிய விவரங்களை புவனகிரி போலீசாருக்கு திருவெறும்பூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் புவனகிரி போலீசார் அவனை கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லையில் கடந்த ஆண்டு காணாமல் போனது என தெரிய வந்தது.

 

குற்றவாளிகளிடமிருந்து வழக்கின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மேலும், இவர்கள் நடத்திய வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்து, வழக்கின் தகவல்களை பெற்றதோடு அவர்கள் இருவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின்படி மணிகண்டகுமாரை திருச்சி மத்திய சிறையிலும், மற்றொருவன் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர்.

 

இவ்வழக்கில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை திருச்சி எஸ் பி செல்வநாகரத்தினம், திருவெறும்பூர் ஏ.எஸ்.பி அரவிந்த் பனாவத் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.