திருச்சி பீமநகரில் ஓனரின் வீட்டிலேயே நகை திருடிய வேலைக்காரன் கைது.
பாலக்கரை காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
திருச்சி பீமநகர் புதுசெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முரளி குமார் (வயது 51 ) இவரது வீட்டில் கடந்த 4 மாதங்களாக திருச்சி லால்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (வயது 25 ) என்பவர் வேலை செய்து வந்தார் .
இந்த நிலையில் ஜெயபிரகாஷ் உரிமையாளர் முரளி குமார் வீட்டில் இருந்த 9 கிராம் தங்க மோதிரம் ஒன்றை திருடியதாக தெரிகிறது.
இது குறித்து முரளி குமார் பாலக்கரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து வீட்டு வேலைக்காரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .