திருச்சியில் வரும் 25ஆம் தேதி சோழிய வேளாளர் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டம். இன்று கால்கோல் விழா நடைபெற்றது .
திருச்சியில் வருகிற 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்
சோழிய வேளாளர் எழுச்சி மாநாடு / பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஆர்.வி ஹரிஹரூன் பிள்ளை தலைமையில் கால்கோல் விழா நடந்தது.
சோழிய வேளாளர் சங்கம் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச்சங்கம் மற்றும் சோழிய வேளாளர் இளைஞர் பேரவை, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகம் தமிழ்நாடு இணைந்து நடத்தும் திருச்சி சோழிய வேளாளர் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டம் வருகிற 25-ந் தேதி ஞாயிற்று மாலை 4 மணிக்கு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்கான பந்தல்
அமைக்கும் பணிக்கான கால்கோல் விழா வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.வி. ஹரிஹரூன் பிள்ளை
தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதில் சோழிய வேளாளர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.