தனது மகளை மிகவும் ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசிவரும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி சாதனா கண்ணீர் மனு.
கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களும் இருக்கிறார்கள். இவருக்கு டிக்டாக்கில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமிக்கும் அடிக்கடி ஆன்லைனில் சண்டை வருவது வழக்கம்
இந்நிலையில், தன்னைக் குறித்தும், தனது குழந்தைகள், கணவர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி பேசுவதாகவும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவதூறு பரப்பும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சியில் பிரபல யூட்யூபரும், முன்னாள் டிக்டாக் பிரபலமான திருச்சி சாதனா புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” சிக்கந்தர் என்ற சிக்கந்தர் ஷாவும், ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமியும் அசிங்கமான ஆபாச பேச்சால் என் குழந்தைகளை பேசி வருகின்றனர். 11ஆம் வகுப்பு படிக்கும் எனது குழந்தையை கூட மிகவும் அசிங்கமாக பேசி இருக்கிறார்கள். காதால் கேட்க முடியாத அளவுக்கு கொச்சையாக பேசி வருகிறார்கள் சிக்கந்தரும் சூர்யாவும்.
தொடர்ந்து மீடியாக்கள் முன்னால் அவதூறு பரப்பி வருகிறார்கள். தொடர்ந்து மன உளைச்சலால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் தான் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். இது தொடர்பாக எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காவல்துறையே எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகவும் மிரட்டுகிறார்கள், எனவே அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என கண்ணீருடன் கூறினார் .