Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் 75 ஆண்டுகளாக நிழல் தந்து வந்த வேப்ப மரத்தை தனது கடைக்கு இடையூறாக இருப்பதாக கூறி அடியோடு வெட்டி நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

0

'- Advertisement -

திருச்சி உறையூரில் தனது கடைக்கு இடைஞ்சலாகயிருந்த 75-ஆண்டு கால வேப்பமரம் வெட்டி அகற்றம்

 

 

திருச்சி, உறையூர், நாச்சியார் கோவில் தெருவை சார்ந்தவர் இராமானுஜம். இவர் தனக்கு சொந்தமான இடத்தை கடைகளாக மாற்றி ஜோதி பூஜா ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

 

இவருடைய மேற்படி கடைக்கு வெளியே சாலையோரத்தில் சுமார் 75-ஆண்டுகள் நன்கு வளர்ந்த வேப்பமரம் ஒன்று இருந்தது.

இந்த மரத்தை தனது கடை வியாபாரத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாக கருதிய இராமானுஜம். கடந்த 08.05.2025ந் தேதி அதிகாலை மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சட்டவிரோதமாக திருச்சி மாநகராட்சியில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வேறோடு வெட்டி விற்றுள்ளார்.

இதனால் அப்பகுதியே பொழிவிழந்து காணப்படுகிறது. இந்த வேகாத அக்னி வெயிலிலும் சுமார் 75-ஆண்டுகள் நிழல் தந்து பொதுமக்களுக்கு பயன் அளித்து வந்த வேப்ப மரத்தை சட்டவிரோதமாக அரசிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வேறோடு வெட்டி விற்று இலாபமடைந்த மேற்படி இராமானுஜம் மீதும் அவரின் இந்த சட்டவிரோத செயலுக்கு துணையாகயிருந்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களும், திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும் எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் என அப்பகுதி பொதுமக்கள், வாழ்த்துக்கள் சமூக ஆர்வலர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.