Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மகன் இருவருக்கும் நடந்த மோதலில் மண்டை உடைப்பு .

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் என்பவருக்கும் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  மறைந்தமுத்து உடையார் மகன் பழனிச்சாமி இவர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆவார் .

இந்த இருவருக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .

 

இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு வாய் தகராறில் ஆரம்பித்து அடிதடியில் முடிவடைந்தது . இதில் இருவருக்கும் மண்டை உடைந்தது. ஒருவர் திருச்சி காவிரி மருத்துவமனையிலும், மற்றொருவர் திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

 

இது குறித்து ராம்ஜிநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

 

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மற்றும் திமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்  இருவரும் மோதி மண்டை உடைந்த சம்பவத்தால் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.