Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: உறையூர் மீன் மார்க்கெட் போன்று மணப்பாறை மாட்டு சந்தையிலும் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஒப்பந்ததாரர் .

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுச் சந்தையில் மாட்டு உரிமையாளா்கள், வாகன உரிமையாளா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

 

இதுதொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

 

திருச்சி மாவட்டத்தின் பாரம்பரிய சந்தையாகவும், பெரிய அளவிலான மாட்டுச் சந்தையாவும் உள்ள மணப்பாறை மாட்டுச் சந்தையில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம், மாடுகளுக்கான நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான கட்டண வசூலை குத்தகைக்கு எடுத்த தரப்பினா் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றனராம்.

 

மாடுகளை சந்தைக்கு கொண்டு வரும்போது மட்டுமல்லாமல், விற்ற மாடுகளைக் கொண்டு செல்லும் போதும் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இதைக் கண்டித்து விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு முத்தரப்புக் கூட்டம் நடத்தி, கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மறுநாளே மீண்டும் கூடுதல் கட்டண வசூல் தொடா்கிறது.

 

உரிய ரசீதுகளும் வழங்கப்படுவதில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் சிதம்பரம் அளித்த புகாரின்பேரில் கோட்டாட்சியா் விசாரணைக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். விசாரணை அறிக்கையின்படி குத்தகைதாரா் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் உறுதியளித்துள்ளாா்.

 

திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டிலும் இதேபோன்று ஒப்பந்ததாரர் அறிய கட்டணம் வசூலிக்கப்படுவதாக இருந்த புகாரில்  இரண்டு வாரங்களுக்கு முன் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள் வியாபாரிகள் அதன்பின் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் அறிவிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும் எனக்கூறி  மறுநாளே பழையபடி அதே அதிக கட்டணத்தை வசூல் செய்து வருகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. உறையூர் மார்க்கெட் இருக்கும் திருச்சி மாவட்ட கலெக்டர்  உரிய விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பாரா என திருச்சி பீமா கட் வியாபாரிகள் மற்றும் வந்து செல்லும் மூன்று நான்கு சக்கரம் மற்றும்  லாரி உரிமையாளர்கள், அனைவரது எதிர்பார்ப்பு .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.