சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை அமமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம்.
இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
கீழ் வரும் காரணங்களுக்காக:
1. மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் வழங்கப்படும் சுகாதாரமற்ற குடிநீர்.
2. பல மாதங்களாகியும், எந்த வேலையும் நடைபெறாத மேரிஸ் தியேட்டர் மேம்பாலம்.
3. மக்களின் எதிர்ப்பையும் மீறி பசுமை பூங்காவில் வெட்டப்பட்டு வரும் மரங்கள்.
4. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் உறையூர் மீன் மார்க்கெட்டில் வசூலிக்கப்படும் அநியாய நுழைவு கட்டணம்.
5. கிட்டத்தட்ட 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான்.
மேல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் உட்பட, பல்வேறு வழிகளிலும் மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கும், செயல்படாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து,
நாளை திங்கள்கிழமை (28-04-2025), காலை 10 மணி அளவில், திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி தலைமையில்,
தலைமை நிலைய செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன்,
ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .