தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கருத்தரங்கம்.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, அரிமா 72 என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது .
அதன் தொடர்ச்சியாக, திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர தி.மு.க சார்பாக, மாபெரும் கருத்தரங்கம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகர அவைதலைவர் நூர்கான் வரவேற்புரையாற்றினார். மாநகர செயலாளர் மு.மதிவாணன், கருத்தரங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை உரையாற்றினர் .
கருத்தரங்கத்தில் பட்டிமன்ற புகழ் பேச்சாளர்கள் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர், புலவர் சண்முகவடிவேல், செல்வி. சமிதா பாண்டியன், ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்,
நிகழ்வின் முடிவில் மாநகர துணைச் செயலாளர் ஆறு.சந்திரமோகன் நன்றி உரையாற்றினார் .
மேலும் இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, கவிஞர் சல்மா, செந்தில்,
பகுதி செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.