Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரை சேர்ந்த மேலும் ஒர் பெண் உயிரிழந்தார் .

0

'- Advertisement -

திருச்சி உறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்து உள்ளனர் .

 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Suresh

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தி.மு.க வார்டு கவுன்சிலர் முத்துக்குமாரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்ட நிலையில், எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

 

இந்நிலையில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, திருச்சி உறையூர் குழுமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தி (வயது 75 ) நேற்று வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது உயிரிழந்த ஆனந்தி என்பவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததாகவும் இதன் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளார் என விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், உறையூர் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.