திருச்சி மாவட்டத்தின் துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (25.04.2025) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக பின்வரும் இடங்களில் நாளைய தினம் மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் தடை பகுதிகள்: நேருநகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்.அக்பர்சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ, பி, இ, ஆர், பிஎச் செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.