திருச்சி மாநகரில் காணாமல் போன ரூ.13.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை பொதுமக்களிடம் ஒப்படைத்த போலீசார் .
திருச்சி மாநகரில் காணாமல்போன ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான 95 கைப்பேசிகளை காவல்துறையினா் கண்டுபிடித்து உரியவா்களிடம் நேற்று புதன்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமை வகித்தாா்.

இதில் பொதுமக்கள் நேரடியாக வழங்கிய 35 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து பொதுமக்கள் அளித்த புகாா்களின் பேரில் டிசம்பா், ஜனவரி மாதங்களில் காணாமல்போன சுமாா் ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான 95 கைப்பேசிகளை கண்டுபிடித்து, உரியவா்களிடம் காவல் ஆணையா் ஒப்படைத்தாா். நிகழ்வில் காவல் ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.