திருச்சி உறையூர் 10வது வார்டில் உள்ள மின்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் நான்கு வயது குழந்தை , இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர் . மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் உறையூர் பகுதியில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வரப்பட்டது .
குடிநீர் குழாய்கள், தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு குளோரின் பவுடர் அடிக்கப்பட்டு நானே முதல் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படும் என நேற்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம் -5ல், உறையூர் பகுதிக்குட்பட்ட 23-வது வார்டு,
சக்தி மாரியம்மன் நகரில்
கழிவுநீர் கலந்த குடிநீரால் பொதுமக்கள் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறதாக அந்த வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது .
இன்று மேயர் இந்த பகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு சென்று கண் தொடைப்புக்கு ஆய்வு மேற்கொண்டாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் .