சிறந்த மாநகராட்சியின்(?) அவலநிலை. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் தொகுதியிலேயே சாக்கடை நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு . அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் .
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி திருச்சி மாநகராட்சி (?)யின் அவலம். மக்கள் உயிரிழப்பு.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வார்டு 10-ல், மின்னப்பன்தெரு , பனிக்கன்தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது.
இதனால் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழப்பு. பலரும் மருத்துவமனையில் அனுமதி. மக்கள் போராட்டம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் நேற்று மாலையில் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்..

உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார், வட்டச் செயலாளர் சி. சந்திரசேகரன், அம்மா தொழிற்சங்க பேரவை அணி செயலாளர் தண்டபாணி, மாணவரணி செயலாளர் நாகூர் மீரான், நிர்வாகிகள் லோகநாதன், டிங்கர் ரமேஷ், ராஜா மாணிக்கம், வேணி, ஆகியோர் உடன் இருந்தனர்.
இப் பகுதி மக்கள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்றரை வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகிய பெண்கள் என மொத்தம் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உறையூர் பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது.
அதே நேரம், மாநகராட்சி அதிகாரிகளோ, அமைச்சரோ இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர், போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் பிரட், பரோட்டா உள்ளிட்டவைகளை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு உடனே நின்றுவிடும் என அலட்சியமாக பதிலளித்ததுடன், மெத்தனப் போக்குடன் அலட்சியமாக செயல்பட்டு,வரும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தசெயல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.