திருச்சி கே.கே.நகரில்
மதுவுக்கு அடிமையான தொழிலாளி திடீர் தற்கொலை
உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை.
திருச்சி கே.கே.நகர் மாரியம்மன் கோவில் தெரு, பழனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30) தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்ற பிரபு நள்ளிரவு வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.இது குறித்து அவரது மனைவி தவசு மணி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.