திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் வரும் 24 தேதி வரை ஒரு வார காலம் குடிநீர் வினியோகம் ரத்து.பகுதிகள் விபரம் ….
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் வழக்கமான குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஒருவார காலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் விவரம் பின்வருமாறு, “திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறையில் உள்ள ஆரக்குழாயில் மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி நேற்று (17.04.2025) வியாழக்கிழமை முதல் தொடங்கி உள்ளது.
எனவே இந்த நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் செல்லும் இடங்களான அம்மா மண்டபம், ஏ.ஐ.பி.இ.ஏ. நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல் ஆகிய பகுதிகள். மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மாலை நேர குடிநீர் விநியோகம் வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி வரை இருக்காது. காலை நேர குடிநீர் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும்.
மறுநாள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.