திருச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே பட்ட பகலில் செப்டிக் டேங்க் கழிவு நீரை மாநகராட்சி சாக்கடையில் விட்ட லாரி, மேயர் கவுன்சிலரிடம் கூறிவிட்டேன் என பதில்
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங்குகளை தனியார் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிகள் மூலம் அகற்றி மாநகராட்சியில் முறையான அனுமதி பெற்று கல்கண்டார் கோட்டை, காஜாமலை போன்ற பகுதிகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இறக்க வேண்டும்.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15.4.2025 ) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டல் எதிரில் பட்டப்பகலில் மதியம் 2 மணி அளவில் ஸ்ரீ பாபா செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியில் இருந்து கழிவு நீரை மாநகராட்சி சாக்கடையில் திறந்து விட்டனர் .
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் அந்த லாரியில் இருந்த நபர்களிடம் இது போன்ற தனியார் கழிவுகளை மாநகராட்சி சாக்கடையில் திறந்து விடலாமா என கேட்டபோது பொன்மலை மண்டல சுகாதார மேற்பார்வையாளர் மூலம் இந்த வார்டு கவுன்சிலர் மற்றும் மேயரிடம் சொல்லிவிட்டு தான் செய்கிறோம் உங்கள் வேலையை பாருங்கள் என லாரியில் இருந்த நபர்கள் ( ஊழியரா ? உரிமையாளரா ? என தெரியவில்லை ) கூறியதாக அந்தப் பொதுமக்கள் கூறினார் .
பொதுமக்களின் சுகாதாரத்தை காக்க வேண்டிய திருச்சி மாநகராட்சி மேயரே தனியார் செப்டிக் டேங்க் கழிவு நீரை மாநகராட்சி சாக்கடையில் திறந்து விட கூறினாரா ? அல்லது இந்த வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி கூறினாரா ? இந்த பகுதி சுகாதார மேற்பார்வையாளருக்கே வெளிச்சம்