திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
அவர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கு ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையில் நூற்றுக் கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பக்தர்களை போலீஸார் வரிசைப் படுத்தி அனுப்பிக் கொண்டிருந்த போது, ஒரு பக்தர் திடீரென வரிசையின் இடையே புகுந்துள்ளார். இதைக் கண்ட டிஎஸ்பி பழனி, அந்த பக்தரை ஒருமையில் பேசி, திட்டியதாகக் கூறப்படுகிறது. அதை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையறிந்த திருச்சி எஸ்.பி செல்வ நாக ரத்தினம், இது தொடர்பாக டிஎஸ்பி பழனியிடம் விசாரணை நடத்தியதுடன், அவருக்கு குறிப்பாணை (மெமோ) பிறப்பித்து விளக்கம் கேட்டுள்ளார்.