வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் பாத யாத்திரை தொடக்க நாளை நினைவு கூறும் வகையில் திருச்சியில் உள்ள ஸ்தூபியில் அஞ்சலி.
திருச்சியில் உள்ள
வேதாரண்யம்
உப்பு சத்தியாகிரக ஸ்தூபியில் அஞ்சலி.
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் பாத யாத்திரை தொடக்க நாளை நினைவு கூறும் வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை

திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேலைவாய்ப்புத்துறை முன்னாள் இயக்குனர் ஹரன் தலைமையில், ஸ்தூபியில் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
மேலும்
நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை செயலர் மருத்துவர் ஞானவேல் “வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டம்: சிறு குறிப்பு” என்ற தொகுப்பை வெளியிட தொழிலதிபர் பாரதி, ஹரன், சண்முகம், மூத்த சமூக ஆர்வலர், ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர நலச் சங்க நிர்வாகிகள் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் தளபதியாக விளங்கிய சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் தியாகத்தை நினைவு கூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.