திருச்சியில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் அதன் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையம் மற்றும் 14 புதிய கிளைகள் திறப்பு விழா.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் திருச்சியில் அதன் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற்றும் 14 புதிய கிளைகளையும் திறந்து வைத்தது.
நியூபெர்க் மேக்னம் – பெண் சுகாதார பணியாளர்களுக்காக “வுமன் ஹெல்த் கார்டு” திட்டம் – திருச்சியில் தொடக்கம்..
மருத்துவ டயக்னோஸ்டிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், மேக்னம் இமேஜிங் & டயக்னாஸ்டிக்ஸுடன் கூட்டாக, திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நோயறிதல் மற்றும் இமேஜிங் மையமான நியூபெர்க் மேக்னத்தை தொடங்கி இருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த இணை முயற்சி, திருச்சி மக்களுக்கு விரிவான, நவீன மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும்.
நியூபெர்க் மேக்னம் விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையாற்றினார். அவர் திருச்சியில் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற்றும் 14 புதிய கிளை மையங்களையும் மெய்நிகராக (virtual) திறந்து வைத்தார். இந்த கிளைகள் கே.கே.நகர், புதுக்கோட்டை, டிவிஎஸ் டோல் கேட், பேரம்பலூர், அரியலூர், துறையூர், திருவண்ணாமலை, ராமலிங்கம் நகர், தில்லைநகர், மணப்பாறை மற்றும் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டு, மக்கள் மிக எளிதாக தரமான டயக்னாஸ்டிக் சேவைகளைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில், திருச்சி காவல் வட்டாரக் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் வி. வருண்குமார், ஐ.பி.எஸ், மற்றும் மருத்துவ இயக்குநர் (ஜாயிண்ட் டைரக்டர்) டாக்டர் ஜி.எஸ். கோபிநாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர். மேலும், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு, மற்றும் நியூபெர்க் மேக்னத்தின் நிறுவனர் மற்றும் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ரேடியாலஜி துறைத் தலைவர் டாக்டர் பவாஹரன் ராஜலிங்கம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கினர்.
நோய்த்தடுப்பு பரிசோதனைகளிலும், பெண்கள் நலத்திலும் முழு தாக்கத்துடன் செயல்படும் நியூபெர்க் மேக்னத்தின் ஒரு முக்கிய முயற்சியாக, திருச்சி மாநகராட்சி பெண் சுகாதார பணியாளர்களுக்காக சிறப்பு “வுமன் ஹெல்த் கார்டு” வெளியிடப்பட்டது. இந்த ஹெல்த் கார்டு மூலம், திருச்சி மாநகராட்சியில் உள்ள பெண் சுகாதார பணியாளர்கள் குறைந்த செலவில் பரிசோதனைகளைச் செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள். இதில் பேப் ஸ்மியர் பரிசோதனை ₹300-க்கு, மாமோ கிராம் ₹500-க்கு, மேலும் இரத்த பரிசோதனைகளில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது, பெண்களில் பொதுவாக காணப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்புப்புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவும்.
இந்த ஹெல்த் கார்டுகளை திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், திருச்சி மாநகராட்சி பெண் சுகாதார பணியாளர்களிடம் விழாவின் போது வழங்கினார். சமூக நலனுக்காக பணி செய்யும் பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் இந்த முயற்சி, தரமான, எளிமையான பரிசோதனைகளை வழங்கும் நோக்கில் நியூபெர்க் மேக்னத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இவிழாவின் போது நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு அவர்கள் பேசுகையில், “நியூபெர்க் மேக்னத்தின் மூலமாக, டயக்னாஸ்டிக் துறையின் எதிர்காலத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்கிறோம். மேக்னம் இமேஜிங்குடன் ஏற்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பு, இரத்த பரிசோதனை, இமேஜிங் மற்றும் மொலிகுலர் டெஸ்டிங் எல்லாமே ஒரே இடத்தில், தொழில்நுட்ப துல்லியத்துடன் வழங்கக்கூடிய ஒரு முழுமையான சுகாதாரத் தீர்வை உருவாக்கி உள்ளது. இந்த அதிநவீன வசதி மூலம் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை திருச்சிக்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த, கூட்டு முயற்சி தொடக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 15 ஒருங்கிணைந்த நோயறிதல் மையங்கள், 25 ஆய்வகங்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட சேகரிப்பு மையங்களுடன் உலகத்தரம் வாய்ந்த சேவையை வழங்கும் அதன் தடத்தை வலுப்படுத்தும்.
திருச்சியில் உள்ள நியூபெர்க் மேக்னமில் சேவைகளின் சிறப்பம்சங்கள்:
🔹 யூனிட் I – மேம்பட்ட ரேடியாலஜி மற்றும் இமேஜிங் சேவைகள்
• 500 ஸ்லைஸ் கார்டியாக் சிடி
• 1.5T சத்தமில்லா எம்.ஆர்.ஐ
• மாமோகிராம், எக்ஸ்-ரே

• அல்ட்ராசவுண்ட் டாப்ப்லர்
🔹 யூனிட் II – ஒருங்கிணைந்த நலவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பரிசோதனைகள்
• இரத்த பரிசோதனைகள் மற்றும் முழுமையான உடல்நலம் சோதனைகள்
• ஈசிஜி | ஈசிஏசோ | பிஎஃப்டி | ஆடியோமெட்ரி
• கண் பரிசோதனை
• அல்ட்ராசவுண்ட்
• வெரிகோஸ் வெயின் (நரம்பு வீக்கம்) டே-கேர் சேவை
• நோயறிதல் மற்றும் சிகிச்சைச் செயற்பாடுகள்
• கருப்பை குழந்தை பரிசோதனை மற்றும் ஸ்கேன் (Fetal Clinic)
• மேம்பட்ட ஜெனோமிக் பரிசோதனைகள்
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேக்னம் இமேஜிங் & டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், கதிரியக்கவியல் துறைத் தலைவருமான டாக்டர். பவஹரன் ஆர், மேலும் கூறுகையில், “இந்த கூட்டணி, திருச்சி நகரின் சுகாதாரத் துறையில் ஒரு முக்கியமான முன்னேற்ற கட்டமாக கருதப்படுகிறது. நியூபெர்க் மேக்னத்தின் மூலம், நாங்கள் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நோயறிதல் சூழலை உருவாக்கியுள்ளோம். மருத்துவர்களுக்கு நோய்களை மேலும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் நோயாளிகளுக்கு துல்லியமான மற்றும் பிழையில்லா சுகாதாரத் தகவல்களை வழங்கும் வகையில் செயல்படுகிறது.
நியூபெர்க் – மேக்னம் கூட்டணியின் முதன்மை நோக்கம், தமிழகம் முழுவதும் சிறப்பு சிகிச்சைகள் மற்றும் நோயறிதல்களை, குறைந்த செலவில், சரியான நேரத்தில், எளிதாக பெறக்கூடியதாக மாற்றுவதே ஆகும். இந்த புதிய வசதியுடன், நோயாளிகளும், மருத்தவர்களும், நியூபெர்க் நிறுவனம் இந்தியா மற்றும் உலகளவில் கொண்டுள்ள வலையமைப்பின் ஆதரவுடன், 6,000-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை அணுகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.”
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ்:
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வலுவாக செயல்பட்டு வரும், இந்தியாவின் முன்னணி டையாக்னஸ்டிக்ஸ் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும். CAP & NABL ஆல் அங்கீகாரம் பெற்ற 200க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுடன், நியூபெர்க் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் நம்பகமான டையாக்னஸ்டிக்ஸ் மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த குழு அதிநவீன டையாக்னஸ்டிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கான அணுகலை உருவாக்கியுள்ளது. இது மிகச்சிறந்த மருத்துவ நோயியல் வல்லுநர்கள், உயிர்வேதியியல் வல்லுநர்கள், மரபியல் வல்லுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள் மற்றும் பல சான்றளிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்களைக் கொண்டுள்ளது, 6000 வகையான நோயியல் மற்றும் கதிரியக்க ஆய்வுகள் மற்றும் ஆண்டுதோறும் 30 மில்லியன் சோதனைகளைச் செயல்படுத்தும் திறன் கொண்டது. நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், உலகம் முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட நகரங்களில் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் துறையில் பயிற்சி செய்ய புதிய தலைமுறை டையாக்னஸ்டிக்ஸ் நுட்பங்களைக் கொண்டுவருகிறது. 5500+ பின்கோடுகளை சென்றடையகூடிய வீட்டு சேகரிப்பு சேவையுடன் அனைத்து அடுக்கு மக்களுக்கும் குறைந்த கட்டணம் மற்றும் துல்லியமான டையாக்னஸ்டிக்ஸ் சேவையை வழங்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.