நாளை அம்பேத்கரின் பிறந்தநாள். திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரும் திரளாக பங்கேற்க அழைப்பு .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியிருப்பதாவது :-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்,
திருச்சி மாநகர் மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம்
தலைமையில்,

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில்,
நாளை 14.4.2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டானில் அமைந்துள்ள அன்னாரது
திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது,
இந்த நிகழ்ச்சியில்:
மாவட்ட, மாநில ,பகுதி வட்ட ,ஒன்றிய ,நகர, ஊராட்சி , கிளை
கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் .