Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனியார் பேருந்துகளில் அதிக ஒலியெழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றம்

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) நேற்று முன் தினம்   திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 

மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் செல்லும் தனியாா் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய வகையில் ஒலிப்பான்களை பொருத்தி, அவைகளை ஒலித்து வருவதாகப் போலீஸாருக்கு புகாா் வந்தது.

 

Suresh

புகாரைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் வடமலை தலைமையிலான போக்குவரத்துப் போலீஸாா் நேற்று முன்தினம்  திங்கள்கிழமை அன்று தணிக்கையில் ஈடுபட்டனா்.

 

அப்போது அதிகமாக ஒலி எழுப்பிச் சென்ற இரு தனியாா் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் வைத்து அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய வகையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களைப் பறிமுதல் செய்து, பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனா்

 

தற்போது திருச்சி மாநகர் பகுதியில் பயன்பாட்டில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளிலும்  அதிக ஒலியெழுப்பும்   ஏர் ஹாரன்கள்  பொருத்தப்பட்டுள்ளது . இந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள்  பள்ளிகள் மற்றும் மருத்துவமனை பகுதிகளில் அதிக ஒலி எழுப்பி  போட்டி போட்டு பெருந்தை இயக்கி வருகின்றனர் . எனவே திருச்சி மாநகரில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளிலும் உள்ள ஏர் ஹாரன்களையும்  அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம் .

Leave A Reply

Your email address will not be published.