Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போட்ட பெட்ரோலுக்கு காசு கேட்ட பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி.

0

'- Advertisement -

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா (வயது 38) என்ற மனைவி இருக்கும் நிலையில் இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

 

Suresh

இவர் நேற்று வழக்கம்போல் வேலையில் இருந்த நிலையில் சீனிவாசன் என்ற 48 வயது நபர் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அவர் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்ன நிலையில் புஷ்பா அதன்படி போட்டார்.

 

அதன் பிறகு புஷ்பா அவரிடம் பணம் கேட்ட நிலையில் மேனேஜரை வந்து கேட்க சொல் நீ எதற்காக கேட்கிறாய் என்று கூறி தகராறு செய்ததோடு புஷ்பாவை கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பாக அந்த பெட்ரோல் பங்கின் மேலாளர் அப்துல் சமன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இவர் திமுக நகர இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.