திருச்சி மதுக்கடையில் சரக்கு மது வாங்குவதில் தகராறு.
ரவுடி, வாலிபர் இடையே மோதல்

2 பேர் கைது.
திருச்சி, இபி ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கடந்த 30 ந்தேதி அன்று கோணக்கரை டாஸ்மாக்கில் மது வாங்கிக் கொண்டிருந்தார், அப்போது இவருக்கும் உறையூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரவுடியான ராஜாவுக்கும் (வயது 46 ) தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இது குறித்து இருவரும் மாற்றி மாற்றி அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல்நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.