திருச்சி உடையான்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு. தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் …
திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
யார் அவர் ரயில்வே போலீசார் விசாரணை

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் திருச்சி ரெயில் நிலையத்திற்கும் இடையே உடையான் பட்டி ரெயில்வே கேட் அருகே வந்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதபமாக இறந்துள்ளார். இறந்த வாலிபர் சிமெண்ட் கலரில் ரெடிமேட் முழுக்கை சட்டை கருப்பு கட்டம் போட்டது, ஊதா கலரில் வெள்ளை கட்டம்போட்ட கைலி அணிந்திருந்தார். அவரது இடது மார்பில் எம்ஏ.என பச்சை குத்தியிருந்தது. இந்த சம்பவ இடத்திற்கு திருச்சி இருப்பு பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இறந்த வாலிபரை பற்றி பற்றி தகவல் தெரிந்தால் ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.