அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (மாற்றுத்திறனாளி). இவர் அரசு பணியில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்துள்ள நிலையில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தது உள்ளார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மனைவியான வித்யா மோனல் என்பவருடன் அரவிந்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வித்யா மோன தன்னை துணை முதலமைச்சர் உதயநிதியின் பி.ஏ. அதாவது உதவியாளராக அரவிந்த இடம் அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.
அரவிந்தன் ஆசையை மற்றும் கனவுகளை தனக்கேற்ற மாதிரி பயன்படுத்திக்கொண்ட வித்யா, அரவிந்துக்கு சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதியில் ரூ. 2 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசிய நிலையில், அரவிந்த் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வித்யாவிற்கு ரூ. 1 லட்சம் முன் தொகையாக செலுத்தி உள்ளார். இதையடுத்து மீத பணத்தை இரு தவனையாக பெற்றுக் கொண்ட வித்யா மோனல், போலி நியமன ஆணையை அரவிந்துக்கு வழங்கியுள்ளார்.

அரவிந்தும் ஆணையை மிகுந்த மகிழ்ச்சி உடன் பெற்றுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து பணியில் சேர்வதற்காக ஆசையுடன் அலுவலகத்திற்குச் சென்ற அரவிந்தற்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அரசாணை பெற்ற அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த அரசாணை போலி என்பது தெரியவந்தது.
இதை அடுத்து பாதிக்கப்பட்ட அரவிந்த், இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில், அரவிந்தனின் புகாரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான திமுக பிரமுகரான வித்யா மோனல் மற்றும் அவரது கணவர் ராஜுவை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
மேலும் வித்யா மோனல் சின்னத்திரை, பெரியத்திரை உள்ளிட்ட படப்பிடிப்புகளுக்கு ஆள் சேர்க்கும் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திமுக பிரமுகரான வித்யா மோனல் தன்னை துணை முதலமைச்சர் உதயநிதியின் உதவியாளர் எனக்கூறி அரவிந்தை ஏமாற்றியது அம்பலமானது.
தொடர்ந்து விசாரணை தீவிர படுத்திய போலீசார் தலைமறைவான வித்யா மோனலை மோசடி உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.